Tuesday, February 5, 2013

அனைத்து பெண் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் - மலாலாவின் ஆசை

அனைத்து பெண் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் - மலாலாவின் ஆசை பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நீண்டநாட் சிகிச்சைகளின் பின்னர் உடல்நலம் பெற்ற மலாலா முதற்தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் பேசியுள்ளார். 

அனைத்து பெண்களும் அனைத்து பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என 15 வயதான அந்தச் சிறுமி 

தெரிவித்துள்ளார். 

சிகிச்சைகளின் பின்னர் கருத்து தெரிவித்த மலாலா, 

நான் இப்போது நல்லா இருப்பதாக உணர்கிறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும். மருத்துவர்களின் உதவியுடன் கடவுள் எனக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார். இங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என்னை தனது பிள்ளை போல் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மிகவிரைவில் முழுமையாக குணமடைவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவை தலிபான்கள் கடுமையாக துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காக்கினர். 

கடந்த ஒக்டோபர் மாதம் இவர் தலை உட்பட உடலின் பல பாகங்களில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். 

பாகிஸ்தானில் சிகிச்சை பெற்ற மலாலா மேலதிக சிகிச்சைகளுக்காக பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

திவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை மூன்று சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...