Saturday, February 16, 2013

சிரியாவில் புரட்சியாளர்களிடம் தோற்கும் அரச படைகள் ?

சிரியாவில் புரட்சியாளர்களிடம் தோற்கும் அரச படைகள் ?சிரிய வடக்குப்பகுதியில் உள்ள அல்சத்ததா என்ற எண்ணெய் வயல் நகரத்தில் இடம்பெற்ற போரில் 100இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரின் இறுதியில் அந்த எண்ணெய் நகரத்தை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். 

இதில் 30 புரட்சிப் படையினரும், 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இறந்து விட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர். 

சிரியாவில் உள்நாட்டு சண்டை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரிய அரச படை ஒவ்வொரு முக்கியப் பகுதிகளையும் போராளிகள் வசம் இழந்து வருகிறது. 

கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் சண்டைக்கு அங்கு 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...