Tuesday, February 5, 2013

பாரீஸ் பெண்களும் ஜீன்ஸ் அணியலாம்: பழமையான சட்டம் விலகியது

பாரீஸ் பெண்களும் ஜீன்ஸ் அணியலாம்: பழமையான சட்டம் விலகியது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நீண்ட காலத்துக்கு பின் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

பிரான்சின் தலைநகரான பாரீஸ் நகரத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் அணியும் உடையான ஜீன்ஸ் அணிவதற்கு கடந்த 1800ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. 



பெண்கள் ஜீன்ஸ் அணிய விரும்பினால் நகர பொலிசாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று, அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

கடந்த, 1892 மற்றும் 1909ம் ஆண்டுகளில், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த சட்டம், அதிகாரப்பூர்வமாக, நடைமுறைக்கு வரவில்லை. 

பாரீஸ் நகர பெண்கள், இந்த சட்டத்துக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், 200 ஆண்டுகளுக்கு பின் இந்த சட்டம் நீக்கப்பட்டு உள்ளது. 

இந்த தகவலை, பிரான்சின் பெண்கள் உரிமை துறை அமைச்சர், நஜாத் வல்லாட் பெல்காசெம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...