Tuesday, February 5, 2013

பெண் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்: சவுதி மதரு ஆலோசனை

பெண் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்: சவுதி மதரு ஆலோசனை பெண் பிள்ளைகளும் கட்டாயம் பர்தா அணி வேண்டும் என சவுதி அரேபிய மதகுரு ஒருவர் தெரிவித்த கருத்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

அனைத்து பெண் பிள்ளைகளும் பர்தா அணிவதன் மூலம் பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார். 



இஸ்லாமிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது செய்ஹீத் அப்துல்லா தாயுத் என்ற மதகுருவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மதகுரு சவுதி அரேபியாவின் ஒரு நீதிபதியுமாவார். 

சவுதி அரேபியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான சம்பவங்கள் இஸ்லாம் மதத்தை பாதிக்கும் என குறிப்பிட்ட மதகுரு குறித்த சம்பவங்கள் இணையம் வழியே மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறினார். 

இஸ்லாமிய சட்டப்படி பருவமடைந்த பெண்கள் பர்தா அணிய வேண்டும் என குறிப்பிடுகிறது. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...